குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் மீது திட்டமிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தாம் கண்டிப்பதாகவும் பாராளுமன்றில் இன்று அவர் கூறினார்.
அவரை இலக்கு வைத்து அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகருக்கு கவனம் செலுத்தி பாதுகாப்பு அமைச்சருக்கும் ஆலோசனைகளை, வழங்கி அவரின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
இதேவேளை நாட்டில் டொலர், டீசல், பெற்றோல், பால் மா தட்டுப்பாடு நிலவும் நிலையில் உயர்த்தரப் பரீட்சை காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரத் துண்டிப்பு தொடர்பாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டார்.
மேலும் பொருளாதார சிக்கல்கள் தொடர்பாக தாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து இதுவரை பதில்கள் கிடைக்கவில்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.