பிரதான தபால் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படவிருந்த ஏராளமான கடிதங்கள் பாணந்துறை, பிங்வத்த கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொலிஸாரும், தபால் திணைக்களத்தின் விசாரணை பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிங்வத்த கடற்கரையில் கடிதங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் தபால் அலுவலக அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.