மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இந்த வருடத்தில் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் சர்வதேச ரீதியில் பல்வேறு முன்னணி விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத்தள விமான நிலையத்தின் சர்வதேச விமான சேவைகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் மாத்திரம் மத்தள விமான நிலையம் ஊடாக 32,957 பயணிகள் விமானம் போக்குவரத்து நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதுடன் அவற்றுள் 584 விமானங்கள் சர்வதேச சேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மத்தள விமான நிலையம் ஊடாக கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பெப்பிரவரி மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 2,919 சுற்றுலா பயணிகள் நாட்டிகு வருகைத்தந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.