பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதல்

அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய நபரும் அவ்விடத்திலேயே நஞ்சு அருந்திய நிலையில், பொலிஸார் அந்நபரை பொறுப்பேற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகவும், இதனை அவதானித்த குறித்த அதிகாரி அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE