பாகிஸ்தானில் இந்து மத தொழிலதிபர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் சிந்து மாகாணத்தின் அனாஜ் மண்டியில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபரான சுனில் குமார் (44) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், சிந்து மாகாணம், கோட்கி மாவட்டத்தில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் சதன் லால் என்பவரும் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த திங்களன்று நடந்த தனது பருத்தி தொழிற்சாலை மற்றும் மாவு மில்லை திறக்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தஹார் பிரிவை சேர்ந்தவர்கள் தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. சதன் லால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து செவ்வாயன்று ஏராளமானவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பச்சால் தஹார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். நிலத்தகராறு காரணமாக லால் கொல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. 2 ஏக்கர் நிலம் எனக்கு சொந்தமானது. ஏன் அதனை தர வேண்டும். பாகிஸ்தான் தலைமை நீதிபதி மற்றும் அதிகாரிகள் எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் சதன்லால் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE