
ஆந்திராவில் புதிய சம்பள உயர்வு ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடாவில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 7ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் விஜயவாடா முழுவதும் முடங்கியது.