
நாட்டின் மின் விநியோகத்தை விட பாவனை அதிகரித்து காணப்படுவதன் காரணமாக மீண்டும் ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று மாலை 6.30 முதல் 8.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு இடம்பெறக் கூடுமென இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.