நோர்வே அரசாங்கம் நடவடிக்கைகளை எளிதாக்குகிறது.

நோர்வேயில் அரசாங்கம் கொரோனா தொற்றினால் நடைமுறையில் இருந்த சில நடவடிக்கைகளை 01.02.2022  இரவு 11 மணிக்கு எளிதாக்கியுள்ளது.

01.02.2022  இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் சில மாற்றங்கள்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை, மற்றும் உட்புற, வெளிப்புற நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்களினதும் எண்ணிக்கையில் விதிக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் நீக்கப்படுகிறது.

நிலையான இருக்கைகள் கொண்ட அரங்க நிகழ்வுகளில் ஒரு மீட்டர் இடைவெளி கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக ஆலயங்களில், திரையரங்குகளில், கலாச்சார மண்டபங்களில் ….

மது அருந்தும் கூடங்களில் போடப்பட்டிருந்த விதிகள் அகற்றப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பார்களில் நடனமாட முடியாது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு மற்றும் ஓய்வு நேர நிகழ்வுகள் உட்புறத்திலும், வெளியிடங்களிலும் நடைபெறலாம். பொழுதுபோக்கு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை சிறுவர்கள் மற்றும் பெரியோரின் பாவனைக்கு திறக்கலாம்.

நோர்வேயில் நுழையும் போது எல்லையில் PCR சோதனை செய்ய வேண்டிய தேவை நீக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE