
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில், அதற்காக உரிய வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வின் அணிவகுப்பில் முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளின் சுமார் 6,500 உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்