6 வயது சிறுமி ஒருவரின் மீது கேற் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி நேற்று (29) காலை ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்றிருந்த நிலையில், தாய் கேற்றினை திறக்க முற்பட்ட வேளையில் அது சரிந்து விழுந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி தம்புத்தேகம, முசல்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.