
பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க துவங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹங்கா டோங்கா – ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்தது.