கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடிப்புசத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்து எரிவாயு வால்வினை அகற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளது.