கொவிட்-19 பரவல் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விஷேட அறிவித்தல் இத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலருக்கு கோவிட்-19 தொற்று றுதிப்படுத்தப்பட்டுள்ளதால் டுள்ளதால் 01 2022 ம் திகதிவரை தூதரகம் முடப்பட்டிருக்கும். மீண்டும் 2022 ம் திகதி பொதுமக்கள் சேவைக்காக இத் தூதரகம் திறக்கப்படவுள்ளது. தயவு செய்து அவசர சேவைகளுக்கு மட்டும் கீழுள்ள இலக்கத்திற்குத் தொட ர்பு கொள்ளவும்,(+974) 77388977) சிரமத்திற்கு வருந்துகிறோம் 12 ஜனவரி 2022 இலங்கைத் தூதரகம் டோஹா கட்டார்”