இலங்கையின் 74ஆவது சுதந்திரதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட அனைத்து நாடுகளின் இராஜதந்திரிகள் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதுடன் அவர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் நேற்று கொழும்பு மாவட்ட செயலக கட்டடத்திலுள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.