
மொரட்டுவை – சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதில், 19 வயது இளைஞர் காயமடைந்துள்ளார்.
அவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.