யாழ்.போதனா வைத்திய சாலையில் வயோதிபப்பெண் ஒருவரின் 3 பவுண் நகைகள் நேற்றைய தினம்(6) திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சிகிச்சையின் நிமித்தம் , “எக்ஸ்ரே” எடுப்பதற்காக சென்ற போது , தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள் வைத்துவிட்டுச் சென்றுள்ளதாகவும், திரும்பி வந்து பார்த்த போது அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொலிஸ் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு , வைத்திய சாலை நிர்வாகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.