கனடாவின் ஸ்கார்பரோவில் பள்ளி ஒன்றில் புதிய கொரோனா மாறுபாடான Omicron தொற்று கண்டறியப்பட்ட விவாகரத்தில் ரொறன்ரோ பொது சுகாதாரத்துறை விசாரணையை துவங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடுக்கு பின்னர் புதிய ஓமிக்ரான் மாறுபாடானது உலக நாடுகளை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாளுக்கு நாள் ஓமிக்ரான் மாறுபாடால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நோர்வே நாட்டில் கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்து கொண்ட 100கும் மேற்பட்ட விருந்தினர்களில் 60 பேர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது உலக நாடுகளில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா உள்ளிட்ட பல நாடுகள் நேரடி விமான சேவைகளை தடை செய்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் சிக்கியுள்ள கனேடிய மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்கார்பரோவில் Precious Blood கத்தோலிக்க பள்ளியில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில், அவருக்கு ஓமிக்ரான் தொற்றாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பள்ளியானது கொரோனா பரவல் கண்டறியப்பட்ட நிலையில் நவம்பர் 13ம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து டிசம்பர் 3ம் திகதி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.மட்டுமின்றி, மேலும் 6 பள்ளிகளில் க்ரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ரொறன்ரோ பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.