பிரித்தானியாவில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்…

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் ஆறு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதை சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் உறுதிப்படுத்தியுள்ளார்.

B.1.1.529 என அறியப்படும் கொரோனா மாறுபாடு, இதுவரை பார்த்தவற்றில் மிக மோசமானது எனவும், இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் திறனைக் கொண்டிருப்பதாகக் கவலை உள்ளது என நிபுணர்கள் விவரித்துள்ளனர்.

தற்போது வரை பிரித்தானியாவில் B.1.1.529 மாறுபாடு யாருக்கும் உறுதியாகவில்லை. தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவில் இதுவரை 59 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கொரோனா மாறுபாடு எச்சரிக்கையைத் தொடர்ந்து பல தென் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பிரித்தானியர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் 6 நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் எனவும், அந்நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படும் என பிரித்தானியா சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் அறிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, Lesotho மற்றும் Eswatini ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாவித் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.