வடகொரியாவில் மாணவன் ஒருவனுக்கு மரண தண்டனை!காரணம் இதான் !

வடகொரியாவில் இருக்கும் மக்கள் நெட்பிளிக்சில் வெளியான ஸ்க்விட் கேம் தொடரை ரகசியமாக பார்த்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த தொடரின் நகல்களை கடத்தி கொண்டு வந்ததற்காக, மாணவர் ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல ஆப்பான Netflix-ல் சமீபத்தில் Squid Game என்ற தொடர் வெளியாகி, உலகில் பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், வடகொரியாவில் இது போன்ற தொடர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், அதையும் மீறி மாணவன் ஒருவன் USB டிரைவில் பதுக்கி வைத்து, அதன் நகல்களை சக மாணவர்களுக்கு விற்றதாக பிடிபட்டதால், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் RFA வெளியிட்டிருக்கும் செய்தியில், பிடிபட்ட மாணவனுக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த தொடரை இரகசியமாக பார்த்த மற்ற 7 மாணவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரின் நகலை வாங்கிய நபருக்கு ஆயுள்தண்டனையும், அதை பார்த்த அவருடைய ஐந்து நண்பர்களுக்கும் கடின வேலை செய்வது(நிலக்கரிச் சுரங்கங்களில்) தொடர்பான தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களைக் கண்டறிய அதிகாரிகள் அங்கிருக்கும் பள்ளிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனெனில், வடகொரியாவில் இந்த தொடரை மக்கள் ரகசியமாக பார்த்து வருவதாக செய்தி வெளியான நிலையில், இந்த சோதனை வேட்டை துவங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை போன்ற மேற்கத்திய பொருட்களின் வருகையை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், சிக்கியவர்களுக்கு கடுமையான அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை எதிர் கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE