சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பூமியிலிருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி நிலையத்தை உருவாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்த விண்வெளி நிலையத்தில் தங்கி சுழற்சி முறையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விண்வெளியில் ஒவ்வொரு ஆண்டும், முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால் ‘‘விண்வெளி குப்பைகள்’’ என அழைக்கப்படும் விண்வெளிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த விண்வெளி குப்பைகள் அவ்வப்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி கழிவுகள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்போது விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி கழிவுகளுடன் மோதுவதை தவிர்க்க விண்வெளி நிலையத்தை குறிப்பிட்ட தூரத்துக்கு நகர்த்தினர்.

இந்நிலையில் விண்வெளி குப்பைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி கழிவுகள் மோதும் அபாயம் இருப்பதால் விண்வெளி வீரர்களை விண்கலத்துக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரோஸ்கோஸ்மோஸ் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE