கடந்த சில நாட்களாக, குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஓலா நிறுவனமும் மின்சார பைக் துறையில் நுழையக்கூடும் என்ற பேச்சு இருந்து வந்தது.
Ola E-Bikes: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்கிய ஓலா, தற்போது எலக்ட்ரிக் பைக் பிரிவிலும் நுழைவதாக அறிவித்துள்ளது. நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும்.
ஓலா (Ola) சிஇஓ பாவிஷ் அகர்வால் ட்விட்டரில் இதை உறுதிப்படுத்தினார். தனது ட்விட்டர் பதிவில் அவர், ‘ஆம் அடுத்த ஆண்டு’ என்று எழுதியுள்ளார்.
அதாவது, 2022-ம் ஆண்டு ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
கடந்த சில நாட்களாக, குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஓலா நிறுவனமும் மின்சார பைக் துறையில் நுழையக்கூடும் என்ற பேச்சு இருந்து வந்தது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வாலும் இது குறித்து குறிப்புகளை அளித்திருந்தார்.
Electreck.Co 13 நவம்பர் 2021 அன்று ஒரு ட்வீட் செய்தது. இதில் ஓலா நிறுவனம் மின்சார பைக் (Electric Bike) மற்றும் மலிவு விலையில் மின்சார ஸ்கூட்டர்ஜளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது.
இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த பாவிஷ் அகர்வால், “ஆம் அடுத்த ஆண்டு” என்று எழுதினார். ஓலா விரைவில் இ-பைக் பிரிவில் நுழையத் தயாராக உள்ளது என்பதை அவரது பதில் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.ஓலா மின்சார ஸ்கூட்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது
ஓலா நிறுவனம் ஆகஸ்ட் 2021 இல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதன் முன்பதிவு செப்டம்பர் 2021 இல் துவக்கப்பட்டது.
இந்த ஸ்கூட்டருக்கு பம்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதிக ஆர்டர்கள் வந்ததால் நிறுவனம் அதன் முன்பதிவு சாளரத்தை மூட வேண்டியிருந்தது.
முன்பதிவு மீண்டும் எப்போது திறக்கும் என வாடிக்கையாளர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள். சமீபத்தில், நிறுவனம் தனது இரண்டு மின் ஸ்கூட்டர்களின் சோதனைச் சவாரி சேவையையும் தொடங்கியுள்ளது.
அதிக அம்சங்கள் மற்றும் குறைந்த விலை காரணமாக பிரபலமானது
ஓலா தனது இரண்டு மின் ஸ்கூட்டர்களை (Electric Scooter) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் ஒன்று ஓலா எஸ்1 (Ola S1) ஆகும்.
இதன் விலை சுமார் ஒரு லட்சத்திற்கு அருகில் உள்ளது. இரண்டாவது மாடலான ஓலா எஸ்1 ப்ரோவின் (Ola S1 Pro ) விலை சுமார் ரூ.1.30 லட்சம் ஆகும். தற்போது மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும். இது தவிர இவை பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
ஓலா நிறுவனம் தனது தனித்துவமான அணுகுமுறையால் வாடிக்கையாளர்களுக்கு இடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது திட்டமிடப்பட்டு வரும் ஓலா பைக்கும் இதே போல் பிரபலமாகும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.