தெற்கு ஈரானில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.4 பதிவு

தெற்கு ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6 புள்ளி 4 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் ஹோர்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், துபாய் வளைகுடா, ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிவரை அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் எதுவும் சேதம் ஏற்பட்டுள்ளதாக என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Leave a Reply

Your email address will not be published.