உலக சுகாதார அமைப்பு, கடந்த வாரம் ஐரோப்பாவில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெனீவா: உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த வாரம் ஐரோப்பாவில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சில பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிக எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் ஐரோப்பா கண்டத்தில் சுமார் 27 ஆயிரம் இறப்புகள் பதிவாகியுள்ளன. UN செய்திகள் உலக சுகாதார அமைப்பின் தரவுகளை அறிவித்தன.
WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரேயஸ், ஜெனீவாவில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘கிழக்கு ஐரோப்பாவில் குறைவான தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பாவில் உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளிலும் வைரஸ் அதிகரித்து வருகிறது’ என்று விளக்கினார்.
“இது மற்றொரு நினைவூட்டல். நாங்கள் மீண்டும் மீண்டும் கூறியது போல், தடுப்பூசிகள் மற்ற முன்னெச்சரிக்கைகளின் தேவையை மாற்றாது” என்று டெட்ரோஸ் கூறினார்.
“தடுப்பூசிகள் (Vaccination) மருத்துவமனைக்கு செல்வதற்கான தேவை, கடுமையான நோய் உருவாக்கம், இறப்பு ஆகிய அபாயங்களை குறைக்கின்றன. ஆனால் இவை நோய் பரவுவதை முழுமையாகத் தடுக்காது”.