சீனாவின் பலே திட்டம்!! வெளிவந்தது இரகசியம்

சீன கரிம உரத்தை இலங்கைக்கு ஏற்றி வந்த சீன கப்பலான ‘Hippo Spirit’ இலங்கை கடலுக்குள் நுழைவதற்காக அதன் பெயரை Seiyo Explorer என மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20,000 மெட்ரிக் தொன் உரங்களை ஏற்றிக் கொண்டு Hippo Spirit, செப்டம்பர் 22ஆம் திகதி சீனாவில் இருந்து இலங்கையை வந்தடைந்தது. எனினும், குறித்த கப்பலில் இருந்த உரத்தில் அபாயகரமான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கை அரசாங்கம் உர இறக்குமதியை இடைநிறுத்த தீர்மானித்தது.

மேலும் உரத்தை ஏற்றி வந்த கப்பலையும் திருப்பி அனுப்பியுள்ளது. அதன்பிறகு, Hippo Spirit கப்பல் சிங்கப்பூருக்குப் புறப்பட்டு மலாக்கா ஜலசந்தியில் நங்கூரமிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் மலாக்கா நேராக பல நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளமையும் Live AIS Vessel Tracker மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், Hippo Spirit கப்பலின் அடுத்த இலக்கு மீண்டும் கொழும்பு என்றும், கப்பல் கொழும்புக்கு வர உள்ளதாகவும் Live AIS Vessel Tracker காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த கப்பல் Seiyo Explorer என்ற பெயருடன் 9135523 என்ற IMO எண்ணை காட்டியுள்ளது.Hippo Spirit மற்றும் Seiyo Explorer ஆகிய இரண்டும் ஒரே IMO எண்ணைப் பகிர்வது போல் தெரிகின்றதாக கப்பல் கண்காணிப்பு இணையத்தளம் குறிப்பிடுகின்றது.

IMO கப்பல் அடையாள எண் என்பது ஒரு தனித்துவமான ஏழு இலக்க எண்ணாகும். இது ஒரு கப்பலின் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும். பெயர்கள், கொடிகள் அல்லது உரிமையாளர்களின் எந்த மாற்றத்தையும் பொருட்படுத்தாமல் இந்த எண் மட்டும் மாறாமல் இருக்கும். 1994 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட SOLAS ஒழுங்குமுறை XI/3 மூலம் பயணம் செய்வதற்கு IMO எண் ஒரு கட்டாய முன்நிபந்தனையாகும்.

அந்த வகையில் கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, Seiyo Explorer ஏற்கனவே இலங்கை கடலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கப்பல் இலங்கையிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தினார்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24), Seiyo Explorer என்ற பெயருடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு அருகில் இருந்ததை காட்டியதாக கொழும்பு துறைமுகத்தின் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அது கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE