கனடாவில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றும் இலங்கையரான மருத்துவர் ஒருவர், வெள்ளையரல்லாதவர்களும் ( people of colour), பூர்வக்குடியினரும்தான், எண்ணிக்கை மற்றும் நோயின் தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வின்னிபெக்கில் பணியாற்றும் Dr. Amila Heendeniya, வெள்ளையரல்லாதவரான தான் இதைக் கூறும்போது, மக்கள் தான் கூறுவதை ஒருவேளை கவனிக்கலாம் என தான் கருதுவதாகவும், அது அவசியமான ஒன்று என தான் நம்புவதாகவும், மக்கள் தடுப்பூசித் திட்டத்தின்மீது நம்பிக்கைக் கொண்டு, அதனால் அவர்களிடையே தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம் என்றும் தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். மனித்தோபாவில் வாழும் பல்வேறு சமுதாயத்தினரை சென்றடையும் நோக்கில், கொரோனா குறித்துக் காணப்படும் மூட நம்பிக்கைகளை களைந்து, மக்களை தடுப்பூசி பெற உற்சாகப்படுத்துவதற்காக, மருத்துவர்கள் உதவியுடன் ஒன்லைன் பிரச்சாரம் ஒன்று U Multicultural என்ற அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக வெவ்வேறு சமுதாயப் பின்னணிகளைக் கொண்ட மருத்துவர்கள் நால்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மக்கள் கேட்கும் கொரோனா மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள்.ந்த திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட Dr. Amila Heendeniyaவும் ஒருவர் ஆவார்.
இந்த ஒன்லைன் தொடர், பல்வேறு சமுதாயத்தினருக்கும் மருத்துவர்களுக்கும் இடையே ஒரு நம்பிக்கையை உருவாக்கும் என அவர் கருதுகிறார்.கருப்பின, பூர்வக்குடியின மற்றும் வெள்ளையரல்லாத மக்கள், இந்த கொள்ளைநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களிடையே தடுப்பூசி பெறுவது தொடர்பில் சிறிது தயக்கமும் காணப்படுகிறது. ஆகவே, அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தடுப்பூசி பெறுதல் குறித்து முடிவெடுக்க உதவும் வகையில் அவர்களுக்குத் தேவையான தகவல்களை அளிப்பது எங்கள் இலக்காகும் என்றும் கூறுகிறார், U Multicultural அமைப்பின் செய்தித்தொடர்பாளரான Ryan Funk.