கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
கனடாவில் சமீபகாலமாக கொரோனா தொற்று பரவலில் தாக்கும் குறைந்துள்ள நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்று பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கனடா நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் பிற்பகுதிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.