சுகாதார நடைமுறைகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன(Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
நீண்ட விடுமுறை காலப் பகுதியில் பெருமளவான உள்ளுர் சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்கின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ள போதிலும், எவ்வாறு பெரும்பாலானோர் மாகாண எல்லைகளை கடந்து சென்றுள்ளனர் என்பது குறித்து தெரியாது எனவும் அவர் கூறினார். தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி காலப் பகுதி வரையேனும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,