பிரித்தானியாவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க திட்டம்! எதற்காக தெரியுமா?

பிரித்தானியாவில் ஒவ்வொரு வீட்டிலும் வெப்ப பம்புகளை பயன்படுத்துவதற்காக குடும்பத்துக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடுகளுக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்கும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் எரிவாயு கொதிக்கலன்களை மாற்றி, அதற்கு பதிலாக குறைந்த கார்பன் உமிழ்வை கொண்ட வெப்பப் பம்புகளைப் பொருத்தி பயன்படுத்த ஓவ்வொரு குடும்பத்தினரும் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

2035-க்குள் அனைத்து இடங்களில் புதிய தொழில்நுட்பம் கொண்ட வெப்ப அமைப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன்முலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கார்பன் இலக்கை அடையமுடியும் என்பதற்காக அரசு இந்த மானியங்களை அறிவித்தது.இதற்காக 450 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் கொதிகலன் மேம்படுத்தல் திட்டம் (£450 million boiler upgrade scheme) கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்முலம், வரும் ஆண்டுகளில் கார்பன் உமிழ்வு குறையும், மேலும் புதைபடிவ எரிபொருள்களின் மீதான பிரித்தானியாவின் சார்பு மற்றும் எரிவாயுவில் உலகளாவிய விலை உயர்வுக்கு வெளிப்பாடு குறையும் என்று பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, இதே காலகட்டத்தில் பிரித்தானியா முழுவதும் 240,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என அவர்கள் கூறினர். அதே சமயம், ஏற்கனவே இருக்கும் புதைபடிவ எரிபொருள் கொதிகலன்களை அகற்ற வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE