நமக்கு தெரியாத அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் சர்ச் என்ஜின் உதவுகிறது.
உணவு, சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங், திரைப்படங்கள், மருந்துகளை வாங்குவது போன்ற பல விடயங்களையும் கூகுளில் தேடுவோர் ஏராளம்.
கூகுளில் தேடவே கூடாத சில விஷயங்கள் உள்ளது. கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகுள் உருவாக்கவில்லை, உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதை உணர வேண்டும்.
ஆன்லைன் வங்கி
உங்கள் வங்கியின் ஆன்லைன் வலைத்தளங்களைத் Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing) செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்தில் சிக்கி, உங்கள் தனிப்பட்ட விபரங்களை பதிவிட்டு ஆபத்தில் சிக்காதீர்கள்.
கஸ்டமர் கேர் எண்கள்
உங்களுக்கு தேவையான நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் கூகிளில் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைன் மருந்துகள் மூலம் ஆபத்து
கூகுளில் மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை ஒருபோதும் தேட வேண்டாம். அது உங்களின் உயிருக்கே ஆபத்தாய் மாறிவிட கூடும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மருத்துவ அறிகுறிகள் அனைத்தும் கூகுளில் துல்லியமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள். ஆன்லைன் மருந்துகளை, மருத்துவரின் அறிவுரை இல்லாமல் ஆர்டர் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள்.
சமூக வலைத்தள லாகின்
சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளில் இருந்து லாகின் செய்யாதீர்கள். கூகுள் மூலம் லாகின் செய்வது ஃபிஷிங்கிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆன்டி-வைரஸ் ஆபத்து
ஆபத்திலிருந்து தடுப்பதற்கு தானே ஆன்டி-வைரஸ் பயன்படுத்துகிறோம். அதில் என்னப்பா சிக்கல் என்று கேட்குறீங்களா? காரணம் இருக்கு, இலவசமாகக் கிடைக்கும் ஆன்டி-வைரஸ் இல் ஆபத்து நிச்சயம் இருக்கும். இலவசமாகக் கிடைக்கும் எதோ ஒன்றின் பின்னால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் விபரங்களை கொடுத்தபின் தான் இந்த இலவசம் உங்களுக்கு கிடைக்கிறது என நினைவில் கொள்ளுங்கள்.