உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 1ம் தேதி முதல் இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்குள் Covid-19 பரவல் காரணமாக வெளிநாட்டவர்கள் நுழைய தடை அமலில் உள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நவம்பர் 1ம் தேதி முதல் இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் சுற்றுலாத்துறை மந்திரி காண்ஸ்டன்டின் ராஸ்வோசோவ் (Konstantin Razvozov) தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதி அளிக்கப்படாத ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி (Sputnik V vaccine) செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி விரைவில் அனுமதி அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டவர்கள் இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்ததும் கட்டாயம் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகள் கிடைக்க 48 மணி நேரம் வரை ஆகலாம் என்பதால் அதுவரை வெளிநாட்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.