ஒன்ராறியோவில் வாராத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
கனடாவில் எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லிபரல் கட்சியின் ஒன்றாரியோ (Ontario) தலைவர் Steven Del Duca தேர்தல் தொடர்பில் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
தமது கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் ஒன்றாரியோவில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது கட்சி விஞ்ஞான ரீதியான தீர்மானங்களை எடுக்கும் கட்சி எனவும் தற்போதைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் Steven Del Duca தெரிவித்துள்ளார்.