யாராலும் வெல்ல முடியாத, வலிமை வாய்ந்த இராணுவத்தைக் கட்டமைக்கப் போவதாக வட கொரிய அதிபர் கிம் கொங்-உன் (Kim Jong-un) சூளுரைத்துள்ளார்.
இதுகுறித்து அவா் கூறியதாவது,
தாங்கள் வட கொரியாவுக்கு எதிரானவர்கள் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் அதற்கு எதிராக உள்ளன. எனவே, அமெரிக்க அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில் யாராலும் வெல்ல முடியாத வலிமையான இராணுவத்தை உருவாக்குவோம் என்று அதிபர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வரை சென்று அழிக்கக் கூடிய ஏவுகணை கண்காட்சியை தொடங்கி வைத்தபோதே கிம் ஜொங்-உன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.