இத்தாலி நாட்டில் வேளைக்கு செல்வோர் கட்டாயமாக கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறித்து இத்தாலி அரசனது முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரியவந்ததாவது, ‘எதிர்வரும் அக்டோபர் 15ம் திகதி முதல் இத்தாலியில் கிரீன் பாஸ் வைத்திருப்போர் மட்டுமே அலுவகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியினை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் மேலும் 5 முறைக்கு மேலாக இது தொடர்ந்தாள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் ‘ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.