கோவிட் பாதிப்பின் பின்னர், உலகின் ஐந்து நாடுகளின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் தரப்படுத்தலின்படி, டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன், கனடாவின் டொராண்டோ, சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் பாதுகாப்பான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பாதுகாப்பும் சமூக ஒருங்கிணைப்பும், சமூக நம்பிக்கை போன்ற காரணிகள் இந்த நகரங்களை பாதுகாப்பான நகரங்களாக வைத்திருக்க உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டென்மார்க் கோபன்ஹேகனில், கொரோனா பரிசோதனை சுற்றுலா பயணிகள் உட்பட்ட அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. டொரோண்டோவில் தடுப்பூசி செயற்பாடு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தற்போதும் 80 வீதமான கொரோனா கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. கொரோனாப் பரவலின் போது, எல்லைகளை மூடிய நகரங்களில் சிட்னியும் ஒன்றாகும். ஜப்பானின் டோக்கியோ, சிறப்பான சுகாதார குறிகாட்டியை கொண்டுள்ள நகராக அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.