
பிரிட்டன் பிரதமருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அமைச்சர் ஜாக் கோல்ட்ஸ்மித் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் உள்ளார். இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜாக் கோல்ட் ஸ்மித். இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சுற்றுச்சூழல் கொள்கை விவகாரத்தில் பிரதமர் ரிஷி சுனாக் , எந்த ஆர்வமும் காட்டாமல் அலட்சியமாக உள்ளதால் அதிருப்தி அடைந்து தன் பதவியை ராஜினாமா செய்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.