கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் ஒரு லிட்டர் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.272ஆக உயர்ந்து விற்பனையாகிறது.
அமெரிக்கா டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததே, எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் அரசு, இம்மாதத்தில் முதல் 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.35அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.