
மாத்தறை பொல்ஹேன மற்றும் வெல்லமடம ஆகிய பகுதிகளில் கடல் நீர் அடிக்கடி பச்சை நிறமாக மாறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடும் பச்சை நிறத்தில் இருக்கும் கடல் நீரில் இறங்க பலர் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து நாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, உரிய கடல் நீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்றார்.
இது இயற்கையான பாசி நிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.