பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் கபு பகுதியில் உள்ளூர் பழங்குடியினத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் வாகனம் மீது குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகினர்; நான்கு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மஸ்துங் மாவட்ட அதிகாரி சுல்தான் புக்டி கூறுகையில், ‘கபு பகுதியை சேர்ந்த பழங்குடியின முதியவரின் வாகனம் நிறுத்திவைக்கபட்டிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த வாகனத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சடலம் வைக்கப்பட்டிருந்தது. அந்த சடலத்தை மற்றொரு வாகனத்தில் மாற்றும் போது, இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. சாலையோரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதனை வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்; காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.