விவசாயத்திற்கு தேவையான யூரியா உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டத்திற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
யூரியா உரத்தின் அவசியம் குறித்து தௌிவுபடுத்திய விவசாய அமைச்சர், யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விடயங்களை கேட்டறிந்த ஈரான் தூதுவர், இரு அரசாங்கங்களினதும் ஒத்துழைப்புகளின் அடிப்படையில், யூரியா உரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
அதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகளை இலங்கை அரசின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஈரான் தூதுவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடத்திற்கு அவசியமான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் திறைசேரியுடன் கலந்துரையாடி , அமைச்சரவைக்கு பத்திரம் சமர்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.