இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகியை (MIZUKOSHI Hideaki) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் ஜப்பான் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தவும், திறன் மற்றும் தொழில்சார் கல்வி முறைகளை உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது ஜப்பானிய தூதுவருடன் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாட்டின் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில், ஜப்பான் அரசாங்கத்தின் நட்பு ரீதியான உதவிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதன்போது நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், ஜப்பான் நாட்டில் இலங்கையருக்கான தொழில்வாய்ப்பு தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.