முதலில் விற்பனை செய்யப்படவுள்ள முக்கிய 10 நிறுவனங்கள்!

நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்ளின் (SOEs) மேலாண்மை அல்லது உரிமையை தனியார்மயமாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது .
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் பரிந்துரைகளின்படி 55 அரசாங்க நிறுவனங்களில் குறைந்தது 10 நிறுவனங்களை முதலில் விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இலங்கை இறப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனம், ஜனதா உர எண்டர்பிரைசஸ் லிமிடெட், லங்கா சலுசல லிமிடெட், அரச வர்த்தக கூட்டுத்தாபன மொத்த விற்பனை நிறுவனம், லங்கா ஃபேப்ரிக் லிமிடெட், நோர்த் சீ லிமிடெட், லங்கா செரமிக் கம்பனி, லங்கா சிமெண்ட் நிறுவனம், சிமென்ட் கோர்ப்பரேஷன் உட்பட 10 நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 2022 இன் முதல் நான்கு மாதங்களில், மொத்த 55 பெரிய நிறுவனங்களில் 52 நிறுவனங்கள் ரூ. 859 கோடி இழப்பய் சந்தித்துள்ளன.

2021ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 13 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சின் நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே துரித நடவடிக்கையை மேற்கொண்டு, சிக்கலில் உள்ள அரசு நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக புதிய பிரிவை அரசு அமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE