எலிசபெத் மகாராணி காலமானார்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார்.

96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், சமீபத்தில் புதிதாக தெரிவான பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸை சந்தித்து, அவருக்கு வாழ்த்துக் கூறியிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக சுகவீனமுற்றிருந்த மகாராணி, பால்மோரல் இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி.

பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரச பதவியில் இருந்தவர்.

தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

அவரது மரணத்தையடுத்து, முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராக வழிநடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE