ராஜபக்ச குடும்பத்தையும் மொட்டு கட்சியையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளதாக நளீன் பண்டார எம்.பி தெரிவித்துள்ளார். நேற்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்பியதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச எம்.பியின் கருத்துப்படி, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாது, அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் கப்புட்டா ஒதுங்கியிருந்து அரசாங்கத்தை வழிநடத்துகிறார். சுமார் 40 இராஜாங்க அமைச்சர்கள் அடங்கிய பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த காக்கைகளை வைத்து எப்படி அரசாங்கத்தை நடத்த போகிறார் என்பதை அவதானித்து வருவதாக நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.