விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானி அறைக்குள் சண்டை போட்ட விமானி மற்றும் துணை விமானி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டனர்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இருந்து, பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு, ஜூனில் ‘ஏர் – பிரான்ஸ்’ விமானம் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானிக்கும், துணை விமானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை, ஒரு கட்டத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு, பெரிய சண்டையாக வளர்ந்தது.
ஆனாலும், விமானம் பறப்பதில் எந்த தடையும் ஏற்படவில்லை. விமானம், குறித்த நேரத்தில் பாரீஸ் நகரில் தரையிறங்கியது. இருந்தும், இந்த சம்பவம் குறித்து விசாரித்த, விமான பாதுகாப்பு ஆணையம் அளித்த பரிந்துரைப்படி, ஏர் – பிரான்ஸ் நிறுவனம், இரு விமானிகளையும் பணியில் இருந்து நீக்கியது.