
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,687 ஆகும்.