இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் ‘ பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று -26- தெரிவித்துள்ளது .
ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது .
உணவு , எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனதை அடுத்து , இலங்கை வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது .
இந்தநிலையில் வழக்கமான உணவைத் தவிர்க்கும் குடும்பங்களால் இந்த நெருக்கடி கடுமையாக உணரப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் ( யுனிசெஃப் ) தெற்காசிய இயக்குனர் . ஜோர்ஜ லாரியா – அட்ஜெய் கூறியுள்ளார் .
சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் , அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .
தெற்காசியா முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் , உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார் .
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார் .