தற்பாலுறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சரத்துக்களை தண்டனைச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கான திருத்த சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்பாலுறவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சரத்துக்களை தண்டனைச் சட்டத்தில் இருந்து நீக்குவதற்கான திருத்த சட்டமூலத்தை தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலேவத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி, சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற சட்டமூல அலுவலகத்திடம் இந்த சட்டமூலம் 23 ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது.
ஒருவரது விருப்பத்திற்கேற்ப தனது உறவை பேணுவதற்கான உரிமைகளை பாதுகாப்பதற்காக நீண்ட காலமாக குரல் எழுப்பிய மங்கள சமரவீரவின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.