ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் விசேட சந்திப்பு அமைச்சுப் பதவிகள் நாட்டுக்குச் சுமையாக மாறியுள்ளது எனவும், அமைச்சுப் பதவிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு பேச்சிவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி மீண்டும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நாடாளுமன்ற முறைமையின் கீழ் எதிர்க்கட்சியில் இருந்து அரசின் பிரேரணைகளை ஆதரிக்க எதிர்க்கட்சி தயாராக இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமைச்சுப் பதவிகள் நாட்டுக்குச் சுமையாக மாறியுள்ளது எனவும், அமைச்சுப் பதவிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சவார்த்தையில் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.