
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.