இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டம் அனைத்துக் கட்சி அரசு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக நடத்த திட்டமிடப்பட்டது.
மாறாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதியிடம் எழுத்துமூலமான யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜே.வி.பி. நாளை கலந்துரையாட இருந்தது.
இருப்பினும், ஜே.வி.பி.யின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜே.வி.பி அனைத்து கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவோ அல்லது இணைந்து கொள்ளவோ போவதில்லை.
“ஜனாதிபதி ஏற்கனவே அரசாங்கத்தை நியமித்துள்ள நிலையில், சர்வகட்சி அரசாங்கம் என்று பேசி என்ன பயன். இடைக்கால அரசாங்கம் குறித்த அவரது பேச்சுக்கள் முடிந்துவிட்டன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.